Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Monday, 15 August 2011

மொஸில்லா பயர் பாக்ஸ் பைனல் புதிய பதிப்பு 6.0 இலவசமாக தறவிரக்கலாம்



மொஸில்லா தான் அறிவித்த படியே, பயர்பாக்ஸ் பதிப்பு 6னை சென்ற ஆகஸ்ட் 13 அன்று வெளியிட்டது. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த ஒரு தொகுப்பும், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் பயன்படுத்த ஒரு தொகுப்புமாய், இரண்டு பிரவுசர்கள் வெளியாகியுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 5 வெளியாகி சில நாட்களிலேயே இது வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. விண்டோஸ். மேக் சிஸ்டம்,
லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் என அனைத்து வகை கம்ப்யூட்டர் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் பயர்பாக்ஸ் 6 வெளியாகியுள்ளது.
முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகவே பயர்பாக்ஸ் வடிவமைப்பும் வெளியிடுவதும் இருந்து வந்தன. இப்போது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருடன் மொஸில்லா போட்டியிட வேண்டியுள்ளது. எனவே கூகுள் போலவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய பிரவுசர் வெளியிடுவதை வழக்கமாக மொஸில்லா கொண்டுள்ளது.
இன்டர்நெட் உலகம் மிக வேகமாக மாற்றங்களை அடைந்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்க, புதிய மாற்றங்களுடன் பிரவுசர்களை மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என, 6 ஆம் பதிப்பினை வெளியிடுகையில், மொஸில்லா தலைமை நிர்வாகி கேரி கொவாக்ஸ் குறிப்பிட்டார்.
இந்த தொகுப்பில் உள்ள புதிய அம்சங்கள்:
1.சி.எஸ்.எஸ். அனிமேஷன்களை எளிதாக இயக்கலாம். இதனால் இணைய ஆப்ஜெக்ட்களை திரையைச் சுற்றி அமைக்கலாம். இதனால் டைனமிக் என்ற முறையில் இயங்கும் இணைய தளங்களை எளிதாகப் பார்க்கலாம்.
2. இணையத்தில் உலா வருகையில், நம்மைப் பின்பற்றாமல் பிரவுசர் இயங்க வேண்டும். விளம்பரம் மற்றும் பிற சுயநல வேலைகளுக்கு நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களை, நாம் செல்லும் இணைய தளங்களை அறியும் வகையில் இயக்கங்கள் அமைந்திடும். இதனை இந்த பிரவுசர் தடுக்கிறது. ஆண்ட்ராய்ட் போனுக்கான பிரவுசர் தொகுப்பிலும் இந்த தடுப்பு வசதி தரப்பட்டுள்ளது.
3. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், இரு பரிமாணப்படங்களைத் தரும் கேன்வாஸ் (Canvas) தொழில் நுட்பம் இந்த பிரவுசரில் தரப்பட்டுள்ளது.
4. ஆட் ஆன் பில்டர் (Addon Builder) என்ற ஒரு வசதி இதில் இணைக்கப் பட்டுள்ளது. இது இன்னும் சோதனை முயற்சியிலேயே உள்ளதாகக் கூறப் படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் எழுதுவதனை இது எளிதாக்கும்.
5.பிரவுசர் இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 இணைய தளங்களை ஒரே நேரத்தில் இதில் திறந்து வைத்து இயக்கினாலும், குறைந்த அளவிலான ராம் மெமரியையே இது பயன்படுத்துகிறது.
6. இதில் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் வேகம் மற்றும் முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தனியாக அடையாளம் கண்டு நாம் அறிய முடியாது. ஆனால் பெரிய அளவில், அனைத்து வகை செயல்பாடு களிலும் விரும்பத்தக்க மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சென்ற பதிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டவையே.
7. இது ஒரு வேகமான, பாதுகாப்பான மற்றும் திறன் மிக்கது என பிரவுசர் களுக்கான சோதனைகளில் தெரிய வந்துள்ளது. தேவையற்ற விளம்பரங் களை இதில் இணைந்துள்ள ஆட் பிளாக்கர் என்னும் விளம்பரத் தடுப்பு புரோகிராம் தடுக்கிறது.
8. ஒரே விண்டோவில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைத் திறந்து இயக்கலாம். பாதுகாப்பினை முன்னிட்டு, கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் களைத் தடுப் பதற்காக, ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை இந்த பிரவுசர் அனுமதிப்பதில்லை.
ஓப்பன் சோர்ஸ் பிரவுசர்களைத் தந்து வரும் மொஸில்லா, தன் பதிப்பு 5ஐ முற்றிலுமாக பெரிய அளவில் மாற்றி அமைத்திருந்தது. அந்த பிரவுசர் 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டது என மொஸில்லா அறிவித்திருந்தது. இனி தொடர்ந்து, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பிரவுசர்கள் வந்தாலும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட இணைய தளங்கள், புதியனவற்றில் இயங்கு வதற்குத் தடை இருக்காது. பயர்பாக்ஸ் 5 அடிக்கடி கிராஷ் ஆவதாகப் பலர் புகார் அளித்திருந்தனர். பதிப்பு 6 அதனைச் சரி செய்துள்ளது. அது மட்டுமின்றி, மொஸில்லா நிறுவனம், இனி பயர்பாக்ஸ் 5 பிரச்னைகளுக்குத் தீர்வளிக்காது. தன் வாடிக்கையாளர்களுக்கு இதனைக் கூறி, பயர்பாக்ஸ் பதிப்பு 6னை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துமாறு மொஸில்லா கூறியுள்ளது. இதுவரை பயன்படுத்தி வந்த ஆட் ஆன் எக்ஸ்டன்ஸன் புரோகிராம்கள், பதிப்பு 6லும் இணைந்து செயல்படும்.
வர இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 7,8, 9, 10 ஆகியவையும் முக்கியமானவை யாகவே இருக்கும். இருப்பினும் இந்த பயர்பாக்ஸ் பதிப்பு 6 மட்டுமே, ஆரவாரத்துடன் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து பிரவுசர்கள் வர இருப்பதால், இணையதள வடிவமைப் பாளர்களும் ஒரு எதிர்பார்ப்பில் இருப்பார் கள். மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என மொஸில்லா தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.


இயங்கு தளம் :

Windows 2000 SP4/XP/2003/Vista/7


Download Mirrors for: Mozilla Firefox 6.0 Final (13.33MB)
DOWNLOAD

No comments: