பார்ப்பதற்கு ஒக்டோபஸ் போன்று காட்சியளிக்கும் வெல்விட்ச்சியா என்கின்ற இந்த தாவரத்தின் சிறப்பியல்பு யாது தெரியுமா ?.... 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாட்களைக் கொண்டுள்ள வெல்விட்ச்சியா, ஆபிரிக்காவின் நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் பாலைவனங்களில் வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது இரண்டு இலைகளைக் கொண்டுள்ளன, அவை பல்வேறு சிறிய துண்டுகளாக வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது பாலைவனத்திலுள்ள சிறிய விலங்குகளுக்கு தங்குமிடமாக விளங்குகின்றன அத்துடன் இவை பாலைவன வாழ்க்கையில் முக்கிய வகிபாகத்தினை வகிக்கின்றன.
இந்த தாவரமானது 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.வெல்விட்ச்சியா அருகிவரும் தாவரங்களில் ஒன்றாக இருப்பதனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்டிருப்பினும் அதனது விதைகளுக்காக காடுகளிருந்து சட்டவிரோதமாக விலைபோகின்றன.
இந்த இனங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனால் இவை பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.
இந்த தாவரத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஒஸ்ரியா நாட்டினை சேர்ந்த தாவரவியலாளர் பிரீட்ரிச் வெல்விட்ச்(1806-1872) ஆவார் . இவர் 1860ம் ஆண்டு அங்கோலா நாட்டின் தன் பாகத்திலுள்ள நமிப் பாலைவனத்தில் கண்டுபிடித்தார். பிரீட்ரிச் வெல்விட்ச் மகத்தான தாவரவியல் ஆராய்ச்சிக்காகவும், முதன்முதலில் கண்டறிந்து சேகரித்தமைக்காகவும் இத்தாவரமானது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment