Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Wednesday, 26 October 2011

7aum Arivu-2011ஏழாம் அறிவு...திரைவிமர்சனம்.





தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால்  இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....



பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...??? 

ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட  முடிச்சா அப்ப அதுக்கு முன்னாடி இருந்த மக்கள் எந்த அளவுக்கு நாகரிகத்தில், கல்வியில், கட்டகலையில் சிறந்து விளங்கி இருக்க முடியும்?? 

ஆயிரம் ஆண்டு  கோவில் ஒரு சான்று அவ்வளவே...

250 வருசத்துக்கு முன்னாடி இருக்கும் பொருளை கூட ஒரு அமெரிக்கன் கடவுளை பார்ப்பது போல  பீல் பண்ணி பார்ப்பான்.ஆனா இங்க ஆயிரம் வருஷத்து கோவில் சுவத்துலேயே பான்பராக் போட்டு  எச்சி துப்பி வைப்போம்.....காரணம் நம்ம கிட்ட இருக்கும் அலட்சியம்.. அப்படி அலட்சியம் வரக்காரணம் என்ன?? நாம் மிக மிக பழமையானவர்கள்..


பொதுவாகவே தமிழர்கள் பற்றிய  செய்தியை இருட்டடிப்பு செய்வதற்க்கு என்றே உலகம் முழுவதும் பல குழுக்கள்   இருக்கின்றது.. அவர்களுக்கு தமிழர்கள் என்றால் எட்டிக்காய் போல கசக்கும்...தமிழ் என்ற வார்த்தையை பிரயோகித்தால் நக்கல் விடுவார்கள்.. தமிழில் பேசினால் அவர்களை அசிங்கப்படுத்துவார்கள்...அதனால்தான் இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் கிளர்ச்சியும் முக்கிய கிளர்ச்சியுமான வேலூர் சிப்பாய் கலகத்தை வரலாற்றில் இருந்தே தூக்கி தூர எறிந்தார்கள்..இந்திய அளவில் தமிழன் பெயர் பெற்றவிட்டால்..??

எப்போது எல்லாம்  தமிழர்கள் ஒற்றுமையாக எந்த செயலை செய்தாலும் உறவாடிக்கெடுக்க அவர்கள் காய் நகர்த்துவார்கள்.. அதனை செய்து முடிக்க தமிழ் இனத்திலேயே எட்டப்பர்கள் நிறைய பேர் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.. உதாரணம் இலங்கை ...



இலங்கையில் யாழ் நூலகத்தை எரித்து பசி தீர்த்தார்கள்..ஒரு இனத்தை வேர் அறுக்க அவர்கள் பற்றிய பழம்தகவல்களையும் கலாச்சாரத்தையும் சொல்லும் நூல்களை அழித்தாலே போதும்... உதாரணத்துக்கு தஞ்சை பெரிய கோவிலே இல்லையென்றால் நம்மாளே நம்மளை பத்தி பெருமையா நினைச்சி இருக்கமாட்டான்..

கல் தோன்றுவதற்கு முன் பிறந்த மூத்த தமிழ் என்று பெருமையாக சொன்னால் எல்லாம் நாம் நம்பப்போவதில்லை.. ஏதோ அந்த தஞ்சை பெரிய கோவில் இருப்பதால் இப்ப இருக்கற பயபுள்ளைங்க எங்களுக்கு ஆயிரம் வருஷத்திய பாராம்பரியம் இருக்குன்னு பீத்திக்கிறோம்..


இப்படியாக தமிழ் இனத்தின் மீது திட்ட மிட்ட காய் நகர்த்தலின் காரணமாக ஆறாம் நூற்றாண்டில், இங்கு இருந்து சீனாவுக்கு போய் குங்பூ எனும் தற்காப்பு கலை கத்துக்கொடுத்தது, புத்தமதத்தை பரப்பியவரும், பல்லவ அரச குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர் என்றால்  எந்த தமிழருக்கும் தெரியாது... ஆனால் சீன பயணி யுவான்சுவாங் பல்லவ ஆட்சிகாலத்தில் தமிழகத்துக்கு வந்தார்  என்பதை மட்டும் தொடர்ந்து வாழையடி வாழையாக படித்து வருகின்றோம்.. 

காரணம் மேலே   சொன்னதுதான்.. காலம் காலமாய் நடந்து வரும் தமிழ் இனத்துக்கு எதிரான போர்...தமிழர்கள் புத்திசாலிகள் அவர்களை தட்டி வைக்கவில்லை என்றால் வளர்நது விடுவார்கள் என்பதுதான் பொறாமைக்கான அடிப்படை...

எம்ஜியார், சிவாஜி, ரஜினி , கமல் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் தமிழர்களுக்கு சீனா, ஜப்பான்,தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தமிழரின் பெருமையை  சொல்லும்கதைதான்..ஏழாம் அறிவு.. அதை கமர்சியல் கலந்து மசாலா தூவி சொல்லி இருக்கின்றார்...இயக்குனர் முருகதாஸ்...

===============

ஏழாம் அறிவு படத்தின் கதை என்ன??


தமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் காந்தவர்மன் என்ற பல்லவ மன்னனின் மூன்றாவது பிள்ளை போதி தர்மர்.. சீனப்பயணி யுவான் சுவாங் போலவே தமிழ்நாட்டில் இருந்து மூன்று ஆண்டு கால பயணத்தின் முடிவில் சீனாவை சென்று அடைகின்றார்..முதலில் அம்மக்கள் அவரை வெறுத்தாலும் அங்கு மக்களுக்கு மருத்துவம் மற்றும் தற்காப்புகலையை கற்றுதருகின்றார்..இன்றுவரை அவரை மறக்காமல் இருக்கின்றார்கள்..அவரை பற்றி சென்னையில் சுபா (சுருதிஹாசன்) என்ற ஆராய்ச்சி மாணவி போதிதர்மன் பற்றி ஆராய்கின்றார்.. அவரின் பரம்பரை வாரிசுகள் இப்போதும் காஞ்சிபுரத்தில் வசித்துக்கொண்டு இருப்பதை கண்டு பிடிக்கின்றார்.. போதிதர்மரின் வாரிசு..அரவிந்தன் (சூர்யா) ஒரு சர்க்கஸ்  கம்பெனியில் வேலை செய்கின்றார்..அரவிந்தன் டிஎன்ஏ மற்றும் போதி தர்மர் டிஎன்ஏ இரண்டும் பெருமளவு ஒத்து போகின்றது.. இப்படி ஒரு உண்மை கண்டு பிடிக்கும் போதே.. சீன அரசு..டோங்லி என்ற கொலைகாரனை அனுப்பி சுபா மற்றும் அரவிந்தனை தீர்த்து கட்ட அனுப்புகின்றார்கள்.. அது ஏன் என்பதை திரையில் பாருங்கள்..

==============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


இது போல ஒரு சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டதுக்கு முதலில் இயக்குனர் முருகதாசுக்கு நன்றிகள்.


யார் சொன்னது உலகதரத்துக்கு இணையாக தமிழில் படம் செய்வது இல்லை என்று முதல் இருபது நிமிடங்கள்.. அவ்வளவு அற்புதமான   காட்சிகள்... எனக்கு தெரிந்து  இந்த படத்தில் வரும் அந்த  முதல் 20 நிமிடத்தை மட்டும் இன்னும் விரிவாய் த லெஜன்ட் போதி தர்மர் என்று டைட்டில் வைத்து ஒரு முழுநீளப்படம் எடுத்து இருந்தால் அது உலகபடமாக உருவாகி இருக்கும்.. ஆனால் பைசா தேறி இருக்காது.. அதனால் 20 நிமிடம் மட்டும் தங்கள் ஆசை மற்றும் திறைமைக்கு படம் எடுத்து விட்டு அப்படியே கமர்சியலுக்கு தாவி இருக்கின்றார்கள்..



படம் முழுக்க சூர்யாவும் சுருதியும் வியாபித்து இருக்கின்றார்கள்.

சூர்யா போதி தர்மராகவே வாழ்ந்து இருக்கின்றார்...போதிதர்மர் கேரக்டருக்கு தன் உடலை வருத்தி அற்பணித்து இருக்கின்றார்..சுருதியோடு பேசும் காட்சிகளில் இயல்பாய் நடித்து இருக்கின்றார்.. ஆனால் நெருக்கமான காட்சிகளில் ஒரு சின்ன தயக்கம் சூர்யாவிடம் இருப்பது தெரிகின்றது...மவனே நாங்க கண்டுபிடிச்சிட்டோம் இல்லை..
 

சுருதிஹாசன் பளிச் என்று இருக்கின்றார்... மாசு மருவற்ற என் தேகம் என்று சொல்லிக்கொண்டே, கழுத்தை தடவிக்கொண்டு , கொடுத்த காசுக்கு மேல் கண் கிரங்கி பேசும் பாம்பே மாடல் போல இருக்கின்றார்...நல்ல உடலைமைப்போடு தமிழ் பேசும் ஒரு நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்து இருக்கின்றார்.. நல்வரவு...


சில நேரத்தில் மெச்சூர்டாக தெரிகின்றார்.. சில காட்சிகளில் பிளஸ் டு மாணவி போல  இருக்கின்றார்...உடைகளை பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.. முன் அந்தி சாங்கில் சுதந்திரமாய் சுருதியை நிறைய ஷுட்  செய்து, பொறுப்பாய்.. சின்ன பயத்துடன் எடிட் செய்து இருப்பது பாடலை பார்க்கும் போது தெரிகின்றது...



போதிதர்மர் தமிழர் என்று ஒரு கோஷ்ட்டி... அவர் தமிழரே அல்ல என்று ஒரு கோஷ்ட்டி என ஒரு பெரிய விவாதம் இனி  நடக்க வாய்ப்பு இருக்கின்றது..



படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள்..உதாரணத்துக்கு தசவதாரத்தில் வெள்ளைக்கார கமல் மொழி தெரியாத தமிழகத்தில் மொழி தெரிந்த மல்லிகா, எம்எஸ்பாஸ்கர் போன்றவர்களை  உதவிக்கு வைத்துக்கொள்ளுவார்.. ஆனால் இந்த படத்தில் சைனாவில் இருந்து வரும் வில்லன் சென்னையில் எல்லா இடத்திலும் தனி ஒருவனாக பயணிக்கின்றார்...



முதல் இருபது நிமிடம்...ஒளிப்பதிவு, எடிட்டிங், சூர்யா ஆக்ஷன் சீக்குவென்ஸ் எல்லாம் உலகதரம்.ஆனால் சென்னையில் முதல் பாடல் காட்சியில், ஆயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் வைத்துக்கொண்டு பர பர வென அடுத்த ஷாட் ,அடுத்த ஷாட் என்று ஓடிக்கொண்டே இருப்பது காட்சிகளில் தெரிகின்றது...


யம்மா யம்மா சோகபாடலை ரயில்வே யார்டில் வைத்து வாம் டொனில் எடுத்து இருக்கும் அந்த பாடல் அழகு., அதே போல ஷிப்ட் போக்கஸ் கண், முகம் என்று முக்கிய இடங்களை மட்டும் போக்கஸ் செய்தது போல படமாக்கியது  அருமை..


சிறு சேரியில் எடுத்த  சண்டைகாட்சியும் சரி, காட்டில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி சண்டை காட்சிகளையும் குறைத்து இருக்கலாம்..



படத்தின் முரணான விஷயம்... படம் முடியும் போது தமிழர்களுக்கு சமர்பணம் என்று டைட்டில் தமிழில் போட்டு விட்டு அடுத்து நடித்தவர்கள் பெயர் எல்லாம் ஆங்கிலத்தில் ஓடுவது செமை காமெடி...அந்த சமர்பணம் டைட்டில் கார்டை படத்தின் ஆரம்பத்திலேயே போட்டு தொலைத்து இருக்கலாம்..


===========

படத்தின் டிரைலர்..



==================

படக்குழுவினர் விபரம்..


 Directed by     A. R. Murugadoss
Produced by     Udhayanidhi Stalin
Written by     A. R. Murugadoss
Starring     Suriya
Shruti Haasan

Johnny Tri Nguyen
Music by     Harris Jayaraj
Cinematography     Ravi K. Chandran
Editing by     Anthony
Studio     Red Giant Movies
Distributed by     Red Giant Movies
Release date(s)     26 October 2011
Running time     168 minutes
Country     India
Language     Tamil
Budget     INR84 crore (US$18.73 million



==================== 
தியேட்டர் டிஸ்கி..

ஸ்பெஷல் ஷோ  சத்தியம் தியேட்டர் டிக்கெட்டை எனக்கு கொடுத்த நண்பர் முத்துகுமாருக்கு எனது நன்றிகள்.

தியேட்டரில் ஒரு கல் ஒரு கண்ணாடி டிரைலருக்கு செமை கிளாப்ஸ்..

தமிழ் மொழி பற்றி உணர்ச்சியாக பேசும் காட்சிகளில் முக்கியமாக பிரபாகரனை பற்றி பேசும் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் காதை பிளந்தது..

==============

பைனைல்கிக்..

 போதி தர்மர்,தமிழ் உணர்வு, உள்அரசியல் என்று நிறைய விமர்சனங்கள் இந்த படத்தை பற்றி வரும்.. எவ்வளவோ குப்பை படங்களை பார்க்கின்றோம்.. ஆனால் தமிழர்கள்  மறந்து போன அல்லது வேண்டும் என்றே மறக்கடிக்கப்பட்ட விஷயங்களை இந்த படம் நிறைய பேசுகின்றது.. போகி பண்டிகையை உருவாக்கி எப்படி எல்லாம் நம் பழம் செல்வங்கைளை அழித்தார்கள் என்பது போல பல விஷயங்களை நுனுக்கமாய் கமர்ஷியல்விஷயங்கயோடு  இந்த திரைப்படம் பேசுகின்றது... ஒரு தமிழனாய் இந்த படத்தை பார்க்கும் போது சில காட்சிகளில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க முடியவில்லை..சில மைனஸ்கள் இருந்தாலும் இந்த படம் அவசியம் பார்க்கவேண்டிய படம்..


அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

No comments: