Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Thursday, 6 October 2011

விண்டோஸில் லாகின் ஸ்கிரீன் பேக்ரவுண்டை மாற்ற.!!

விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும் பார்த்திருப்போம் அதில் லாகான் செய்யும்போது தோன்றும் நீல நிற புகைப்படத்தை மாற்ற முடியாது. எப்பொழுதும் ஒரே மாதிரி படம் இருப்பதால் அலுப்பு தட்டுகிறது இல்லையா? எனவே இன்று விண்டோஸ் லாகான் ஸ்கிரீன் பின்புலத்தில் உள்ள புகைப்படத்தை நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதை பற்றி பார்க்கப்போகிறோம்,இதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன.

1)Logon Studio
     இந்த மென்பொருளானது இலவச மென்பொருள்தான் இதில் முதலிலேயே நிறைய பேக்ரவுண்டு படங்களுடனே வருகிறது, நாம் நமக்கு பிடித்த படங்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின்னர் இதனை திறந்து உங்களுக்கு தேவையான படத்தை தேர்ந்தெடுத்து அப்ளை என்பதை க்ளிக் செய்யவும்.உங்களின் லாகான் ஸ்கிரீன் மாறிவிடும்.


2)Windows 7 Logon Screen Rotator
இந்த மென்பொருளில் நீங்கள் ஒவ்வொரு முறை லாகின் செய்யும்போதும் தானாகவே படங்கள் மாறும்படி செய்யலாம்.இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை... இந்த மென்பொருளை தரவிறக்கி அந்த பேக்கேஜை Unzip செய்து அதில் உள்ள .exe கோப்பின் மீது க்ளிக் செய்யுங்கள்.




தோன்றும் விண்டோவில் உங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்த பிறகு
Enable And Exit என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் அடுத்தமுறை லாகின் செய்யும்போது உங்களுக்கு வேறு பேக்ரவுண்டுகள் கிடைக்கும்.

3) Windows 7 Logon Screen Change
இதுவும் மேலே உள்ளதை போன்ற லாகின் ஸ்கிரீன் மாற்றும் மற்றொரு மென்பொருள், இதனை தரவிறக்கி உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து லாகான் ஸ்கிரீனாக பயன்படுத்துங்கள்...


No comments: