கூகிள் ஆன்ட்ராய்டு மொபைல் தனது பயனாளருக்கு, பல அரிய வகை சாப்ட்வேர்களை இலவசமாக தனது வாடிக்கையாளருக்கு அள்ளி வழங்குகிறது.கூகுள் தனது இலவச கட்டமைப்பு தொகுப்பை (o.s) ஒவ்வெரு படி நிலையிலும் மேம்படுத்தும் போதும் பல எளிய பயன் தொகுப்புகளையும் சேர்த்து வெளியிடுகிறது.பல்வேறு வசதியினை கொட்டி வழங்கினாலும் தமிழ்மொழியில் உள்ள இணையதளங்களை காணுவதற்கான வசதியினை கொடுப்பது இல்லை.இது பல பயனாளருக்கு வருத்ததை தருவதாக உள்ளது.
ஆன்ட்ராய்டு மொபைலில் அதனுடன் இருக்கும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில்
நாம் opera browser என்று சர்ச் செய்தால் லேட்டஸ் ஆப்ர தொகுப்பான 9.1/12.1 தான் கிடைக்கும்.இதில் தமிழ் மொழி கிடைப்பதற்கு மாற்றம் செய்வது கஷ்டம்.
இருந்தாலும், நமக்கு எப்போதும் உற்றதோழனாக இருப்பது நமது ”ஆப்ர மினி”வெப்பிரவுசர்தான் .
இதை நமது மொபைலில் செயல்படுத்துவதற்கான வழிமுறை:
முதலில் உங்கள் மொபைலில் நார்மல் வெப்பிரவுசரை திறந்து கொள்ளுங்கள்.
பின் கூகிள் வெப் சர்ச்சில் Opera mini 6.1என்று டைப்செய்துஆப்ரா தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.(ஆப்ரா மொபைல் 6.1 ஆன்ட்ராய்டு வெர்சனை டவுன்லோடு) செய்யுங்கள் .
அப்போது இதை டவுன்லோடு செய்யும்போது எச்சரிக்கை
மொபைல் மெனு வரும் அதில் unknown soueces(allow installation of non-market application) என்பதில் டிக் செய்யவும்.மீண்டும் பதிவுயிறக்க தொடங்குங்கள்.
இன்ஸ்டால் செய்த பிறகு…
1. opera mini browser – ஐ ஓபன் செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்று மட்டும் டைப் செய்து ஓ.கே கொடுக்கவும்.
(http://www என்று டிஃபால்ட்டாக தெரியும் எழுத்துக்களை நீக்கி விட வேண்டும்)
3. வரும் “பவர் யூஸர் செட்டிங்ஸ்” power-user setting பக்கத்தில் use bitmap fonts for complex scripts என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். (படத்தை பார்க்கவும்!)
4. பிறகு opera mini – ஐ யை restart செய்யவும். இனி எல்லா தமிழ் இணையதளங்களையும் நீங்கள் உங்கள் மொபைலில் வாசிக்கலாம்.
No comments:
Post a Comment