தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும். அவ்வாறு காணும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும். வீடியோக்களை காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு தளங்கள் உள்ளன. இதுபோன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒருசில மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன. அவற்றில் முக்கியமான மென்பொருள் vDownloader ஆகும். மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து வீடியோவின் முகவரியை (URL) உள்ளிடவும். பின் நீங்கள் குறிப்பிட்ட வீடியோவானது தரவிறக்கம் ஆகும். சில மணி நேரங்களில் வீடியோவானது தரவிறக்கம் செய்யப்பட்டு விடும். இந்த மென்பொருள் அதரிக்க கூடிய தளங்களில் சில குறிப்பிடதக்க தளங்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தளங்களில் உள்ள வீடியோக்களை எளிமையாக தரவிறக்கம் செய்து கொள்ள இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். |
TRANSLATE THIS PAGE
My Bloglist
HOME PAGE
Saturday, 18 August 2012
அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment