நீங்கள் தொடர்ந்து ஹாலிவுட் மற்றும் பல உலக சினிமா திரைப்படங்களைப் பார்த்து வருபவரா? மேலும் பல நல்ல மிகச்சிறந்தத் திரைப்படங்களை காண ஆவல் இருக்கிறதா?அதுவும் இலவசமாக?இதோ உங்களுக்காக இந்தப் பதிவு..
தற்போதயக் காலகட்டத்தில் உலக சினிமாவைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்துகொண்டு வருவதை பலரிடம் இப்பொழுதெல்லாம் காண முடிகிறது.கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட டிவிடி,இணையம் பல போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் எனலாம்.இருந்தாலும் பல நேரங்களில் நாம் நினைத்த அல்லது நாம் விரும்பிய பலதரப்பட்ட பழைய மற்றும் புதிய (மிக முக்கியமாக பழையப் படங்கள்) உலக திரைப்படங்களை (ஹாலிவுட் உட்ப்ட) பல டிவிடி கடைகளில் கிட்டுவதில்லை (இங்கு மலேசியாவில்).எனவே,நினைத்தது ஒரு படம் வாங்கியது ஒரு படம் என்றக் கதையில் இப்படியே திரைப்படங்களைப் பார்த்துவருபவர்கள் ஏராளமாக இங்கும் அங்கும் பெருகி வருகின்றனர்.இதற்கு ஒரு முடிவினைப் பெற இணையத்தளங்களுக்குச் சென்றால் அங்கும் நிறையப் படங்கள் கைகளுக்கு கிட்டுவதில்லை.அதுவும் இலவசமாக பல திரைப்ப்டங்களை பல இணையத்தளங்கள் முன்வைப்பதில்லை,இதற்கு மாறாக பல நேரங்களில் பல இணையத்தளங்கள் திரைப்படங்களைப் பார்க்கவும் மற்றும் பதிவிரக்கம் (டவுட்லோட்) செய்யவும் கட்டணங்களை விதிக்கின்றன.
இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் தினமும் எழுகின்றதா...இதோ உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வை (ஓரளவு) காண இன்றையப் பதிவு.
இன்றைய இணைய உலகில் கோப்புகள் தேடல் இயந்திரங்கள் (Files Search Engines) பலருக்கும் மிகவும் முக்கியமான தங்களுக்கு தேவையான மற்றும் விருப்பமான கோப்புகளை தேடுவதற்கும் இலவசமாக பதிவிரக்கங்கள் (Free Download) செய்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றன என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்.இணைய உலகில் இன்று அதிகமானவர்களால் வலம் வரும் ஒரு தேடல் இயந்திரம் (Search engine) என்றால் Filestube - பை சொல்லாம்.2007 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தேடல் இயந்திரம்,நமக்கு பிடித்தமான தேவையான கோப்புகளை (Files) பல்வேறு கோப்பு சேவைகளிடமிருந்து ஒரே இடத்தில் இருந்தப்படியே நமக்கு தேடி கொடுக்க உதவும் தேடல் இயந்திரமாக திகழ்கிறது.உதாரணமாகக் கூற வேண்டும் என்றால் பல புகழ்பெற்ற இணைய கோப்பு சேவைகளாக (File Hosting Services) இன்றைய நிலையில் வலம்வரும் Megaupload,Rapidshare,Filesonic,Fileserve,Hotfile போன்ற பலதரப்படட கோப்புச் சேவைகளை Filestube தேடல் இயந்திரம் ஒருசேர நமக்கு வழங்குகிறது.
இதில் நாம் நமக்கு வேண்டிய கோப்புகளை மிக எளிதாக ஏறக்குறைய 15 நிமிடங்களில் தேடி விரைவாக பதிவிறக்கம் (உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து) செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.அதற்கு செய்யவேண்டியது மிக சுலபமே.
முதலில்,மேற்கண்ட இணைய முகவரிக்கு சென்று,Search Box - இல் உங்களுக்கு தேவையான கோப்புகளின் பெயர்களை உபயோகித்து தேடவும்.தேவையென்றால்,Search Box - இல் இருக்கும் கோப்புகளின் தேடலில் Format - தையும் இணைத்துக் கொள்ளலாம்.வேண்டிய கோப்பு கிடைத்ததும் கோப்புகளின் URL பயன்படுத்தி உடனுக்குடனே பதிவிறக்கமும் செய்துக்கொள்ளலாம்.கீழே உள்ள உதாரணத்தைக் கவனிக்கவும்....
எடுத்துக்காட்டாக,ஒரு திரைப்படத்தை கீழே உள்ள முறையில் எளிதாக தேடலாம் :
1) MOVIE : Blow Up 1966 FORMAT : AVI
Filestube தேடல் இயந்திரத்தைப் போல Filecrop,Filez போன்றதும் இன்று பரவலாக பலராலும் உபயோகிக்கப்படுகிறது.சந்தர்பம் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.மீண்டும் அடுத்த பதிவில் பல இலவச பதிவிறக்க திரைப்பட இணையத்தளங்களைப் பற்றியும் மேலும் இலவச பதிவிறக்க மென்பொருள்களைப் பற்றியும் சற்று பார்க்கலாம்.
ஏதாவது தவறாக இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.மேலும் உங்கள் கருத்துகளை பின்னோட்டத்தில் இடவும்.நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment