Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Monday, 10 October 2011

மயக்கம் என்ன?






ஒரு பையன் நைட்டு லேட்டா வீட்டுக்கு வந்தானாம்.அப்பா ஏண்டா லேட்டுன்னு 

கேட்டதுக்கு பிரண்ட்ஸ் கூட க்ரூப் ஸ்டடி’ப்பா அதான் லேட் 

ஆகிடுச்சுன்னான்.நம்பிடுவாரா 


அப்பா?,யாறாரு எல்லாம் க்ரூப் ஸ்டடி பன்னிங்க அவங்க போன் நம்பர் 

எல்லாம் குடு நான் 

போன் பண்ணி கேக்குறேன் அப்படின்னார்.



பையன் ஒரு பத்து நம்பர் கொடுத்தான்.


மொத நாலு பேர் சொன்னாங்க,ஆமாம் அங்கிள் இங்க தான் வந்திருந்தான்.படிச்சு 

முடிச்சுட்டு அப்பவே போய்ட்டான் அப்படின்னாங்க.


அப்பாவுக்கு நம்பிக்க வர்ல.


அடுத்து ஒரு மூணு பேருக்கு போன் போட்டார்.


அவங்க சொன்னாங்க இப்பத்தான் அப்பா கிளம்பி போனான்’ன்னு.

அப்பா இன்னும் கன்பியுஸ் ஆகி இன்னும் ரெண்டு பேருக்கு போட்டார்.

அப்பா அவன் ஒரு புக் எடுத்துட்டு வர வீட்டுக்கு போயிருக்கான் இன்னும் வரலையா?ன்னாங்க



இப்ப அப்பா ரொம்ப கடுப்பாயி

கடைசியா ஒருத்தனுக்கு போன் பண்ணார்.


பாவம் அந்த பய புள்ள என்ன சொல்லுச்சோ தெரியல,போன கீழ போட்டுட்டு மயங்கி 

விழுந்துட்டார்.




நீங்க சொல்லுங்க அந்த பையன் என்ன சொல்லியிருப்பான்?தெரியாதவங்க காத கொடுங்க 

சொல்றேன்.


அப்பா இங்கே தான்பா படிச்சிகிட்டு இருக்கான் போன அவன்கிட்ட குடுக்கட்டுமா?

பேசுறிங்களா? அப்படின்னானாம்.



பாவங்க அப்பா அப்பறம் ஏங்க மயக்கம் போட மாட்டாரு?

No comments: