Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Saturday, 17 December 2011

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப்பார்க்க உதவும் இணையத்தளம்

உங்கள் ஆங்கில அறிவை சோதித்துப்பார்க்க உதவும் இணையத்தளம் தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கும் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமையை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது. 1000 ஆங்கிலப் புதிய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த்தைகள் படித்திருக்கிறேன் எல்லாம் ஞாபகம் இருக்கிறது, எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் உதவ ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நம் ஆங்கிலப்புலமையை (“Test your vocab“) சோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வார்த்தையும் குறிப்பிட்ட வகையின் படி பிரிக்கப்பட்டு இருக்கிறது.

5 -ல் இருந்து 10 நிமிடத்திற்குள் நம் ஆங்கில சொல் அகராதியின் புலமையை தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் புதியவர்கள் கூட எளிதாக புரிந்து பயன்படுத்தும் படி இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவை இல்லை, எளிதாக சில நிமிடங்களில் எத்தனை வார்த்தைகள் வரை நமக்கு தெரியும் என்று அறிந்து கொள்ளலாம்.
Go to Website:- http://www.testyourvocab.com/

No comments: