வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் பார்க்கபோவது வலைதளங்களில் ஓடும் எழுத்துகளை உருவாக்குபது பற்றி. நம்முடைய பிளாக்கர் மற்றும் வலைதளங்களில் ஓடும் எழுத்துக்களை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். . நமது வலைப்பூ தங்கம்பழனியில் உள்ளது போல.. இதை உருவாக்குவது மிகவும் எளிதுதான்..
HTML -ல் இதுவும் ஒரு அங்கம்தான்.. இதன் பெயர் மார்க்யூ டேக் (Marquee tag) என அழைப்பார்கள்.
இந்த விளைவை ஏற்படுத்த அடிப்படையானது இந்த நிரல் வரிதான். <marquee></marquee> ஓடும் எழுத்துக்களை உருவாக்க இந்த நிரல் பயன்படுகிறது. ஒரு சில ஓடும் வார்த்தைகளை உருவாக்கப்பயன்படும் HTML நிரல் வரிகளைப் கீழே பார்க்கலாம்.
ஓடும் வார்த்தைகளுக்கான அடிப்படை நிரல் வரிகள்!!
HTML -ல் இதுவும் ஒரு அங்கம்தான்.. இதன் பெயர் மார்க்யூ டேக் (Marquee tag) என அழைப்பார்கள்.
இந்த விளைவை ஏற்படுத்த அடிப்படையானது இந்த நிரல் வரிதான். <marquee></marquee> ஓடும் எழுத்துக்களை உருவாக்க இந்த நிரல் பயன்படுகிறது. ஒரு சில ஓடும் வார்த்தைகளை உருவாக்கப்பயன்படும் HTML நிரல் வரிகளைப் கீழே பார்க்கலாம்.
ஓடும் வார்த்தைகளுக்கான அடிப்படை நிரல் வரிகள்!!
<marqueee> நீ ஓடு.. நீ ஓடு.. ஓடிக்கொண்டே இரு..</marquee>
இதனுடைய வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
நீ ஓடு.. நீ ஓடு.. ஓடிக்கொண்டே இரு..
<marquee direction="right"> நீ வலது நோக்கி ஓடிக்கொண்டிரு..!</marquee>
மேற்கண்ட நிரல்வரியின் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
நீ வலது நோக்கி ஓடிக்கொண்டிரு..!
இரண்டு பக்கமும் சென்று வர
<marquee behavior="alternate">இரண்டு பக்கமும் சென்று வர</marquee>
இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
இரண்டு பக்கமும் சென்று வர
கீழ்நோக்கி ஓடவிட..
<marquee direction="down"></marquee>
மேற்கண்ட நிரலின் வெளிபாடு இவ்வாறு இருக்கும்.
கீழ் நோக்கி ஓடும் வரிகள்..
மேல் நோக்கி ஓட விட
<marquee direction="up">மேல்நோக்கிச் செல்ல...மேல்நோக்கிச் செல்ல...மேல்நோக்கிச் செல்ல...</marquee>
மேற்கண்ட நிரல்வரிகளின் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
மேல்நோக்கி செல்லும் வரிகள்
குறிப்பு;
இவற்றை உங்கள் பதிவுப்பெட்டியில் Edit HTML - என்பதை தேர்வு செய்த பிறகு இந்த நிரல் வரியைப் பயன்படுத்துங்கள்..
அல்லது வழக்கம்போல Page Element==>Add gadget==>Html/javascript என்பதை தேர்ந்தெடுத்தும் நிரல் வரிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்னும் ஒரு சில குறிப்பிட்ட விளைவுகளைத் தரும் நிரல் வரிகளும் உள்ளன.. அவற்றைப் பிறகு பார்க்கலாம்.. இப்பதிவின் மூலம் யாராவது ஒருவர் பயனடைந்தாலும் அது எனக்கு கிடைத்த வெற்றியே.. உள்ளன்போடு தொடர்ந்து ஆதரவளிக்கும் சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. பிறிதொரு பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். நன்றி நண்பர்களே..
No comments:
Post a Comment