Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Tuesday, 20 December 2011

கூகுளில் சில மேஜிக் வார்த்தைகள் .




தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகளை  கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது. இதற்க்கு முன் Do a Barrel Roll என்ற வார்த்தையை கொடுத்தால் கூகுள் தளம் என்ன ஆகும் என பார்த்தோம். இன்று அதோடு வேறு சில வார்த்தைகளை கொடுத்து கூகுள் தளத்தை மாற்றி பார்க்கலாம் வாருங்கள்.
  • Let it Snow
  • Tilt
  • Do a Barrel Roll
  • Hanukkah
இந்த நான்கு வார்த்தைகளும் மேஜிக் வார்த்தைகள் இவைகளை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்தால் என்ன ஆகும் என பார்ப்போம். 

Let it Snow
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உறுவாக்கியுள்ளது.

Tilt
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ கீழே படத்தில் இருப்பது போல ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.

Do a Barrel Roll
இதனை பற்றி நாம் ஏற்க்கனவே முந்தைய பதிவில் பார்த்து இருக்கிறோம். இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.


Hanukkah
இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சதிரதினால் ஆன ஒரு வரி காணப்படும். 


No comments: