Blogger Widgets

My Bloglist

SOFTWARE-VIDEOS

HOME PAGE

Monday, 2 January 2012

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க


டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க – 1 என்ற முதல் பதிவில் டவுன்லோட் செய்த திரைப்படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க வேண்டுமானால் அவை எவ்வகை வீடியோ கோப்பாக இருக்க வேண்டும் மற்றும் எவ்வகை வீடியோ கோப்பாக மற்றும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் இலவச மென்பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு DivX,XviD வீடியோ கோப்புகளாக மாற்றுவது மற்றும் எவ்வாறு டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக பற்றி பார்ப்போம்.

முதலில் DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயருக்கு எந்தவொரு வீடியோ கோப்புகளிலிருந்து டிவிடி(DVD) அமைப்பு வீடியோ கோப்புகளாக மாற்றுவது பற்றி பார்ப்போம். இதற்கு பல சிறந்த கட்டண மென்பொருள்கள் உள்ளன. சில சிறந்த இலவச மென்பொருள்களே உள்ளன. அவற்றில் ஒன்று DVDFlick. இந்த மென்பொருளை இந்த Download DVD Flick சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து நிறுவி கொள்க.

நிறுவிய பின் DVD Flick மென்பொருளை இயக்கினால் கீழே உள்ள திரை தோன்றும். அதில் டிவிடி(DVD) வீடியோ கோப்புகள் கணிணியில் எங்கே அல்லது எந்த போல்டரில்  வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க.

DVD Flick - Select folder

பின் Add Title என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ கோப்புகளை அல்லது திரைபடத்தை தேர்வு செய்து கொள்க. உதாரணமாக நான் இரு mkv  வீடியோ கோப்புகளை சேர்க்க போகிறேன்.

DVD Flick - Select Video file

அடுத்தபடியாக Project Settings என்பதை கிளிக் செய்து, தோன்றும் திரையில் General என்பதை தேர்வு செய்து உங்கள் DVD அளவை தேர்வு செய்து கொள்க. பொதுவாக நாம் பயன்படுத்துவது DVD (4.3GB) இதை தேர்வு செய்து கொள்க.

DVD Flick - CD or DVD Size

பின் Video என்பதை கிளிக் செய்து உங்கள் DVD வகையை (Format) தேர்வு செய்து கொள்க. இதில் நீங்கள் PAL என்பதை தேர்வு செய்து கொள்க. PAL வகை DVDகளையே நமது நாட்டு டிவிடி பிளேயர்கள் சப்போர்ட் செய்யும். NTSC வகை DVDகளை சில நாட்டு டிவிடி பிளேயர்கள் சப்போர்ட் செய்யும் உதாரணம் அமெரிக்கா. ஆனால் தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் இரண்டையுமே சப்போர்ட் செய்கின்றன. PAL வகையை தேர்வு செய்வது சிறந்தது நமக்கு.

DVD Flick - Select DVD Format

அடுத்து Burning என்பதை கிளிக் செய்து , உங்களுக்கு வீடியோ மாற்றம் செய்தவுடன் டிவிடியில் பதிய(Write or Burn) வேண்டுமானால் Burn project to disc என்ற வசதியை தேர்வு செய்து கொள்க. பிறகு நீங்களே தனியாக வேறொரு மென்பொருளை கொண்டு பதிய(Write or Burn) போகிறீர்கள் என்றால் தேர்வு செய்யாமல் விட்டுவிடுங்கள்.

DVD Flick - Burn DVD

அனைத்து முடிந்தவுடன் Accept என்பதை கிளிக் செய்து முகப்பு(Main) திரைக்கு வந்து அதில் குறிப்பிட்ட அல்லது அனைத்து வீடியோ கோப்புகளின் பெயரை மாற்ற வேண்டுமானால் Edit Title என்பதை கிளிக் செய்து தோன்றும் திரையில் மாற்றி கொள்ளலாம். மேலும் இந்த திரையில் கீழே படத்தில் உள்ளது போல்

DVD Flick - Edit Video Title

Target aspect ratio –> Normal(4:3) மற்றும் WideScreen(16:9) என இரு வசதிகள் இருக்கும். உங்கள் டிவி சாதாரண டிவி என்றால் Normal(4:3), பெரிய அகலமான திரை கொண்ட LCD,LED டிவி என்றால் WideScreen(16:9) தேர்வு செய்து கொள்க.

மேலும் உங்கள் படத்துக்கு சப்டைட்டில் (Subtitle) இருந்தால் அது வீடியோ கோப்பின் பெயரிலே அதே போல்டரில் இருந்தால் தானே எடுத்து கொள்ளும். இல்லாவிடில் மேலே உள்ள திரையில் subtitle tracks என்பதை கிளிக் செய்து உங்கள் சப்டைட்டில் கோப்பை இணைத்து கொள்ளலாம்.

அடுத்தபடியாக Menu Settings கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த DVD Menu வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.

DVD Flick - Menu Setting

மேலே தேர்வு செய்த மெனு வகைக்கு கீழே உள்ளது போல் மெனு இருக்கும்.

DVD Flick - Menu 1DVD Flick - Menu 2

கடைசியாக Create DVD கிளிக் செய்து டிவிடி வீடியோ கோப்புகள் உருவாகும் வரை காத்திருக்க.

DVD Flick - Processing

நீங்கள் முன்னர் Burn project to disc என்ற வசதியை தேர்வு செய்திருந்தால் DvdFlick உடன் சேர்ந்து வரும் imgburn மென்பொருள் மூலம் பதிய(Write or Burn) பட்டு விடும். இல்லாவிடில் நீங்கள் முதலில் கொடுத்த கணிணி இடத்தில் (இங்கே நான் கொடுத்தது F:\dvd ) dvd என்னும் போல்டர் உள்ளே கீழே உள்ள அமைப்பில் கோப்புகள் இருக்கும்.

DVD Flick - DVD Output

உங்கள் DVD பதிவு செய்யும்(Write or Burn) மென்பொருளில் மேலே உள்ள இரு போல்டர்களை மட்டும் தேர்வு செய்து டிவிடியில் பதிந்து(Write or Burn) கொள்க. நான் இங்கே தனியாக CDBurnerXP என்ற மென்பொருளை பயன்படுத்தி உள்ளேன்.

CDBurnerXP - Burn DVD

பதிந்த(Write or Burn) பின் உங்கள் டிவிடி பிளேயரில் டிவிடியை போட்டு உங்கள் டிவியில் கண்டு ரசிக்கலாம். அடுத்த பதிவில் DivX,XviD கோப்புகளாக மாற்றுவதை பார்க்கலாம்.


தொடரும் பதிவு விரைவில் :  டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - 3
Download DVD Flick : http://www.dvdflick.net/download.php
Download CDBurnerXP : http://cdburnerxp.se/en/download
THANKS TO AUTHOR:CLICK HERE

No comments: