வேலன்:-டெம்பிள் ஆப் லைப் -விளையாட்டு
படத்திலிருந்து ஒரு பொருளை அதன்பெயருக்கு ஏற்ப சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இரண்டு மூன்று பொருள்களை சேர்த்துதால் தான் ஒரு பொருளை கண்டுபிடிக்கமுடியும் என்றால் சற்று சிரமம் தான். மூளைக்கு அதிகப்படியான வேலையையும் விறுவிறுப்பையும் தரும் இந்த விளையாட்டினை பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
ஒவ்வொரு நிலைகளிலும் நமக்கு நிறைய சவால்கள் நிறைந்திருக்கும். சர்க்யூட் போர்ட் இருக்கும் நாம் எலக்டிரீஷியனாக மாறி இணைப்பு கொடுத்து மின்இணைப்பை வழங்கவேண்டும்.
ஜேம்ஸ்பாண்ட் எப்படி சகலகலா வல்லவராக இருக்கின்றாரோ அதுபோல நீங்கள் எதனையும் எதிர்கொள்ளும் வல்லவராகவும் - அனைத்துவேலைகளையும் அறிந்தவராக இருத்தல் அவசியம்.
கண்டுபிடிப்பதில் நிபுணராகவும் -விளையாட்டில் ஆர்வமும் -உடையவராக இருந்தால் இந்த விளையாட்டு உங்களுக்கு நிச்சயம் நிறைந்த மகிழ்வினை தரும். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment